தனுசு ராசி அன்பர்களே..! இன்று மாறுபட்ட சூழ்நிலை கொஞ்சம் உருவாகக்கூடும். தொழில் வியாபாரத்தில் ஏற்படுகின்ற குளறுபடியை சரியான நேரத்தில் சரி செய்வது ரொம்ப நல்லது. பிறர் பார்வையில் செலவுகள் தெரியும்படி செலவுகள் அதிகம் செய்யவேண்டாம் வாகனத்தை பயன்படுத்தும்போது விவேகத்தை பின்பற்ற வேண்டும். கடன் பிரச்சினைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பண வசதிகள் கிடைக்கும். உங்களுக்கு செயல்களிலிருந்து எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான போக்கு காணப்படும்.
கூடுமானவரை எதிரிகள் இன்று உங்களிடம் இருந்து விலகிச் செல்வார்கள். சிறிய மாற்றங்கள் இருக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியாகவே செல்விர்கள். இருந்தாலும் வாக்குவாதம் என்பது மட்டும் எப்பொழுதுமே தவிர்ப்பது ரொம்ப நல்லது. இன்று உங்களுடைய புத்திக்கூர்மையும் வெளிப்படும். உற்றார் உறவினர் வகையில் சிறிய தொந்தரவுகள் இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை இன்று கொடுக்கும். அதே போலவே இன்று இல்லத்தில் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்