தனுசு ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை உண்டாக்கும் என்றாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். பணவரவு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு சாதகமான இருப்பார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்:2.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.