தனுசு ராசி அன்பர்களே, இன்று சிலருக்கு வேலையின் காரணமாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளை கண்டு மற்றவர்கள் பாராட்டும். குடும்பத்தில் சிக்கல்கள் வந்து விலகிச்செல்லும். அதனால் ஏற்படும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று தொழிலில் கொஞ்சம் வாடிக்கையாளர்களிடம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். புதிய முயற்சிகள் ஏதும் செய்ய வேண்டாம்.
இன்று பணப் பற்றாக்குறை ஓரளவு இருக்கும். அதை நீங்கள் எப்படியும் சமாளித்து விடுவீர்கள். யாரிடமும் தயவுசெய்து பண கடன் மட்டும் வாங்க வேண்டாம். கூடுமானவரை இன்று முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள், ரொம்ப சிறப்பாகவே இருக்கும். மனம் கொஞ்சம் அலைபாய கூடும். தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப சிறப்பை கொடுக்கும். அக்கம்பக்கத்தினரிடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது கொஞ்சம் பொறுமையாகவே செல்லுங்கள்.
கோபத்தை மட்டும் இன்று தவிர்த்துவிட்டால் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள் நிறம்