தனுசு ராசி அன்பர்களே…! இன்று முன்யோசனையுடன் செயல்படும் நாளாகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் அனுகூலம் ஒரு சேர கிடைக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். மாமன், மைத்துனர் வகையில் உங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே திருப்தியான உறவு காணப்படும்.
பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள், இருந்தாலும் தேர்வு முடியும் வரை கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். நிதானமாக காரியங்களைச் செய்யுங்கள். இன்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது. தேர்வை நீங்கள் சந்தோசமாக அணுகுங்கள் தேர்வு முடியும் வரை உணவு கட்டுபாட்டில் கொஞ்சம். காரமான உணவு வகைகளில் கொஞ்சம் தவிர்த்துவிடுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்