Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசி…நல்ல செய்தி வந்துசேரும்…பெயரும் புகழும் கூடும்…

 

தனுசு ராசி அன்பர்களே… இன்று தன வரவு கூடும் நண்பர்கள் உங்களுக்கு ஓடிவந்து உதவிகளை செய்வார்கள்.சுகமான இனிய மகிழ்ச்சி ஏற்படும் பெயரும் புகழும் கூடும்.சொந்த வீடு அமையும் அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்துசேரும். குறுக்குவழிகளை தயவுசெய்து தேடவேண்டாம்.நேர் வழியிலேயே எதையும் சாதித்து கொள்ளுங்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.புதிய முதலீடுகள் மட்டும் இப்போதைக்கு ஏதும் வேண்டாம்.தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் கொஞ்சம் குறையும் விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்யுங்கள்.நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் முக்கியமான பணி நிறைவேறும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும்.

தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். கணவன் மனைவியைப் பொறுத்தவரை சின்ன சின்ன வாக்குவாதங்கள் சின்ன சின்ன சண்டைகள் வந்து செல்லும் ஆனால் எதையும் தயவு செய்து நீங்கள் பெரிதுபடுத்த வேண்டாம். பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடித்தால் மட்டுமே இன்றைய நாள் உங்களுக்கு ரொம்ப சிறப்பாக செல்லும்.

உணவு விஷயத்தில் ரொம்ப கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுங்கள்.அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் இருக்கும் அதை நீங்கள் கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.

வெள்ளை நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அதுபோலவே இன்று சூரியபகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் .

Categories

Tech |