தனுஷ் நயன்தாராவின் பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
தனுஷ் தமிழ்நாட்டு திரைப்பட நடிகர்களில் ஒருவர். இவர் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் படத்தின் மூலம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். அப்போது 18 வயது மட்டுமே நிரம்பியவர் அந்த விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டார் என்பது அவருக்கு மட்டுமே அறிந்த ஒன்றாகும். தன் தந்தையின் பேச்சைக் கேட்டு பள்ளிப் படிப்பை பாதியில் விட்டு சினிமாவில் நடிக்க வந்தார்.
ஆரம்பத்தில் ஆர்வம் இல்லாதவர் பிறகு சினிமாவை நேசிக்கத் தொடங்கினார். 2 தேசிய விருதுக்கு சொந்தக்காரரான தனுஷ் தனது ஆரம்ப காலகட்டத்தில் ஆங்கிலம் பேச வராது அதன் காரணமாக பல இடங்களில் அவமானப்பட்டு இருக்கிறேன் எனவும் கூறியிருக்கிறார். இந்நிலையில் தற்போது நயன்தாரா மற்றும் தனுஷ் பங்கு பெற்ற ஒரு பழைய பெட்டியில் வைரலாகி வந்துள்ளது. 2008 ஆம் ஆண்டு “யாரடி நீ மோகினி” படத்தில் அந்த பேட்டி எடுக்கப்பட்டது.
அதில் நயன்தாராவிடம் உங்கள் கல்லூரி வாழ்க்கையை பற்றி சொல்லுங்கள் என தொகுப்பாளர் கேள்வி கேட்பார். அதன்பிறகு தனுஷிடம் கேட்பார் அதற்கு தனுஷ் நான் கல்லூரிக்கு போனதே இல்லை பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டேன் என பதிலளித்தார். அதை கேட்டதும் நயன்தாரா சற்று கிண்டல் செய்யும் வகையில் விழுந்து விழுந்து சிரித்தார். இதனால்தான் சங்கடத்திற்கு உள்ளான தனுஷ் அதை சிரித்துக்கொண்டே கடந்து சென்று உள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த பேட்டி தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.