Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் அடுத்த பட இயக்குனர் இவரா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.10 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் d43, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் d 44, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Dhanush to team up with Rocky director Arun Matheswaran? - Movies News

இந்நிலையில் நடிகர் தனுஷின் 47 வது படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இதற்கு முன் ராக்கி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகாவில்லை. தற்போது இவர் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சாணிக் காயிதம் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |