Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘கர்ணன்’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகர் தனுஷின் கர்ணன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்திருந்தனர். மேலும் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரிக் குவித்தது .

Karnan Twitter Review: Dhanush's Raw Avatar Is Here To Win Your Hearts! -  Filmibeat

இந்நிலையில் கர்ணன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே 14-ஆம் தேதி அமேசான் பிரைமில் கர்ணன் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் நெட்ப்ளிக்ஸில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |