நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை ஆசிர்வாத் சினிமாஸ் கைப்பற்றியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன் . மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகி பாபு, லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது .
Thanku sir ❤️❤️❤️❤️❤️❤️ https://t.co/AtX0rsgHKQ
— Mari Selvaraj (@mari_selvaraj) April 2, 2021
தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கேரள திரையரங்க உரிமையை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ படத்தை கேரளாவில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.