நடிகர் தனுஷின் காஸ்டியூம் டிசைனரானா கவிதா ஸ்ரீராம் பற்றி பேசப்படுகின்றது.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடித்த அத்ரங்கி ரே திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. இத்திரைப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தனுஷ் அணிந்திருந்த காஸ்டியூம் பலரின் கண்களை கவர்ந்ததுள்ளது. கவிதா ஸ்ரீராம் தான் அந்த காஸ்ட்யூமை டிசைன் செய்திருந்தாராம்.
https://www.instagram.com/p/CXYYa7Ml_w7/?utm_source=ig_web_button_share_sheet
கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் மாறன் திரைப்படத்தில் கவிதா பணியாற்றியிருக்கின்றார். செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் திரைப்படத்திலும் கவிதா தான் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றுகின்றார். மாறன் திரைப்படத்திலும் இவரே காஸ்டியூம் டிசைனராக உள்ளார். கவிதாவின் மீது நம்பிக்கை வைத்து தனுஷ் தனது அடுத்தடுத்த படங்களில் அவரை கஷ்டம் டிசைனராக தேர்ந்தெடுத்துள்ளார். அந்த நம்பிக்கையை கவிதாவும் காப்பாற்றி வருகின்றார்.