Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷின் கெரியருக்கு ஆப்பு வச்ச லதா ரஜினிகாந்த்”… தனுஷுக்கு தொடர்ந்து அடிமேல் அடி…!!!

தனுஷின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்கள் குறித்துதான் அனைவரும் பேசி வருகின்றனர்.

ஜனவரி மாதம் 17ஆம் தேதி ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிவதாக அறிவித்தனர்‌. இவர்களை சேர்த்து வைக்க பல முயற்சியில் பலரும் ஈடுபடுகிறார்கள். இவர்கள் இருவரும் சேர்வதாக தெரியவில்லை. மேலும் ஐஸ்வர்யாவின் அம்மாவான லதா ரஜினிகாந்த் தனது மகளை திருமணம் செய்து தான் கெரியரில் வளர்ந்த தனுஷ் இப்படி செய்துவிட்டாரே என தனக்குத் தெரிந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் போன் செய்து அவருக்கு பட வாய்ப்புகள் தர வேண்டாம் என கூறியுள்ளாராம்.

இதனால் தனுஷின் கெரியர் பெரிய பிரச்சனையில் இருக்கின்றது. இதைத் தொடர்ந்து தனுஷ் இயக்குனர் வெற்றிமாறனுக்கு கால் செய்து படம் பண்ணலாமா என்று கேட்டுள்ளார் அதற்கு வெற்றிமாறனும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் வெற்றிமாறன் ரஜினியின் குடும்பத்தின் மேல் மரியாதை வைத்துள்ளார். இதனால் தான் மிகவும் பிஸியாக இருப்பதாக கூறி படத்தில் இருந்து நழுவி விட்டாராம். தனுஷின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த மாறன் திரைப்படமும் தோல்வியை தழுவி இருக்கின்றது. இப்போது தனுஷ் அவரின் கெரியரே கேள்விக்குறியாகி வருகின்றது.

Categories

Tech |