நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற ஜூன் 18-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், கலையரசன், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
#JagamaeThandhiram Trailer from June 1st….@dhanushkraja @sash041075 @MrJamesCosmo @Music_Santhosh @AishwaryaLeksh4 @kshreyaas @vivekharshan @kunal_rajan @DineshSubbaray1 @NetflixIndia @chakdyn @Stylist_Praveen @tuneyjohn @santanam_t @sherif_choreo #BabaBhaskar #LetsRakita pic.twitter.com/6NJiE8VuX9
— karthik subbaraj (@karthiksubbaraj) May 29, 2021
மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூன் 1-ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.