ஜகமே தந்திரம் படத்தின் புதிய பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, அஸ்வந்த், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் ஜகமே தந்திரம் படம் வருகிற ஜூன் 18-ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸில் வெளியாகவுள்ளது.
In this tough Times…. Let us Spread Some Love ❤️ #Nethu Video song from 22nd May 2021..@dhanushkraja @Music_Santhosh @AishwaryaLeksh4 @sash041075 @kshreyaas @vivekharshan @sherif_choreo @chakdyn @kunal_rajan @SonyMusicSouth @NetflixIndia #JagameThandhiram #LoveofSuruli pic.twitter.com/TLZl6wIRAz
— karthik subbaraj (@karthiksubbaraj) May 20, 2021
ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற மே 22-ஆம் தேதி ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்ற நேத்து என்ற பாடல் வெளியாகவுள்ளது. இந்த பாடலுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.