Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“தனுஷின் திருச்சிற்றம்பலம் எப்படி…?” பயில்வான் ரங்கநாதனின் விமர்சனம் இதோ…!!!!!!

திருச்சிற்றம்பலம் படத்தின் விமர்சனத்தை பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். அந்த வகையில் செல்வராகவனின் நானே வருவேன் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி, மித்திரனின் திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை மிகவும் நம்பி இருக்கின்றார் தனுஷ்.

இந்த நிலையில் யாரடி நீ மோகினி எனும் வெற்றி படத்தை இயக்கிய மித்ரன் பல வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் மூலமாக ஏழு வருடங்கள் கழித்து அனிருத் மற்றும் தனுஷ் இணைந்து இருக்கின்றார்கள். இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரித்த  இந்த படம் நேற்று திரையரங்கில் வெளியாகியிருக்கின்றது. தனுஷின் படம் பல மாதங்கள் கழித்து திரையில் வெளியானதால் ரசிகர்கள் இந்த படத்தின் முதல் காட்சியை காண ஆவலாக இருந்தனர். அதன்படி இந்த படத்தின் முதல் காட்சி ஆரம்ப நிலையில் திரையரங்குகளை  தனுஷ் ரசிகர்கள் திருவிழாவாக மாற்றினார்கள்.

இந்த நிலையில் படத்தின் விமர்சனத்தை பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, சிறுவயதில் இருந்து தனுஷும் நித்தியாமேனனும் நண்பர்கள். ஒரே அடுக்குமாறு குடியிருப்பில் வசித்து வருகின்றார்கள். சிறுவயது முதலே தனுஷ் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் நல்ல தோழியாக இருக்கின்றார். திரைப்படத்தில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார்கள். நித்யா மேனனை பார்க்கும் பொழுது நமக்கு எப்படி ஒரு தோழி இல்லையே என தோன்றுகின்றது.

இப்படியும் நடிக்க முடியுமா என்ற அளவிற்கு நித்யா மேனனின் எதார்த்தமான நடிப்பு, புன்னகை, கோபம், சோகம் என எல்லாமே தென்றலாக வருகின்றது. சிறு வயதிலிருந்து ராஷி கன்னாவும் இவர்களுடன் சேர்ந்து தான் படிக்கின்றார். தனுஷ் ராஷி கன்னாவை ஒருதலையாக காதலிக்கின்றார். ஆனால் ராஷிக்கன்னா தனுஷின் காதலை மறுத்து விடுகின்றார். கிராமத்தில் இருக்கும் உறவுக்கார பெண்ணாக பிரியா பவானி சங்கர். அவர் மீது தனுஷுக்கு காதல் வருகின்றது.

ஆனால் அந்த காதலை பிரியா பவானி சங்கர் ஏற்கின்றாரா மறுக்கின்றாரா என்பது தெரியவில்லை. மூன்று ஹீரோயின்களும் திறமையை காட்டி இருந்தாலும் ராசி கன்னா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுகின்றார். அவரால் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த முடியவில்லை. ப்ரியா பவானி சங்கர் கிராமத்து பெண்ணாக எதார்த்தமாக தன்னடிப்பால் கண் முன்னாடி நிறுத்தியுள்ளார்.நித்யா மேனன் அசத்தலான நடிப்பால் முழுக்க ஆக்கிரமித்து இருக்கின்றார்.

தனுஷ் இன்றைய இளைஞராக எதார்த்தமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மித்ரன் ஜவகர் வசனம் சூப்பர். பிரகாஷ்ராஜ் திரைப்படத்தில் அடக்கி வாசித்திருக்கின்றார். தாத்தாவாக வாழ்ந்துள்ளார் பாரதிராஜா. பிரமாதமான ஒலிப்பதிவு. அனிருத் இசையில் மூன்று பாட்டுமே நெத்தியடி. தாத்தா திருச்சிற்றம்பலத்தின் பெயரை பேரன் தனுஷுக்கு வைத்திருக்கிறார்கள். ஆன்மீகப் படம் இல்லை. பழைய காதலை புதிய பாணியில் கூறியுள்ளார்கள் என விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |