Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷின் திருச்சிற்றம்பலத்தின் வசூல் இவ்வளவா…?” உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் கலக்குவதால் குஷியில் ரசிகாஸ்…!!!!!!

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். அந்த வகையில் செல்வராகவனின் நானே வருவேன் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி, மித்திரனின் திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை மிகவும் நம்பி இருக்கின்றார் தனுஷ்.

இந்த நிலையில் யாரடி நீ மோகினி எனும் வெற்றி படத்தை இயக்கிய மித்ரன் பல வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் மூலமாக ஏழு வருடங்கள் கழித்து அனிருத் மற்றும் தனுஷ் இணைந்து இருக்கின்றார்கள். இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரித்த  இந்த படம் நேற்று முன்தினம் திரையரங்கில் வெளியாகியிருக்கின்றது. தனுஷின் படம் பல மாதங்கள் கழித்து திரையில் வெளியானதால் ரசிகர்கள் இந்த படத்தின் முதல் காட்சியை காண ஆவலாக இருந்தனர். அதன்படி இந்த படத்தின் முதல் காட்சி ஆரம்ப நிலையில் திரையரங்குகளை  தனுஷ் ரசிகர்கள் திருவிழாவாக மாற்றினார்கள்.

இத்திரைப்படம் முதல் நாள் நல்ல கலெக்ஷன் பெற்றிருப்பதாக சொல்லப்படுகின்றது. இப்படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 9 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் மலேசியாவில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கின்றது. அங்கு வெளியான வலிமை, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட திரைப்படங்களில் முதல் நாளில் வசூலானதை இத்திரைப்படம் முறியடித்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. மேலும் வரும் வாரங்களில் வசூல் அதிகரிக்கும் என சொல்லப்படுகின்றது. இதனால் தனுஷ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |