Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷின் நானே வருவேன்… படத்தின் சில அப்டேட்கள் வெளியீடு…!!!

செல்வராகவன் இயக்கும் தனுஷ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் சில அப்டேட்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கடந்த ஜனவரி மாதம் தன் மனைவியை பிரிவதாக அறிவித்திருந்தார். குடும்பத்தில் இவருக்கு பல சோகங்கள் இருந்தாலும் திரைத்துறையில் முன்னேறி கொண்டே இருக்கின்றார். இவர் தற்போது வாத்தி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இவர் நடிக்கும் வாத்தி திரைப்படமானது கடந்த ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கியது ஹிட் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகின்றது. இதன் வாயிலாக தனுஷ் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இத்திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். திரைப்படத்தின் படப்பிடிப்பை சீக்கிரம் முடித்துவிட்டு மே மாதம் திரையிட உள்ளதாக தகவல் வந்திருக்கின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் கூடிய விரைவில் வெளியாகும்.

தனுஷ் மற்றும் மித்ரன் கூட்டணி யாரடி நீ மோகினி மற்றும் குட்டி திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் சேர்ந்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இத்திரைப்படம் குறித்து பெரிதாக அப்டேட்கள் வராத நிலையில் படக்குழு படப்பிடிப்பை முடித்து டப்பிங் பணியை ஆரம்பித்துள்ளது. இத்திரைப்படமானது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் தனுஷ் கூட்டணி நானே வருவேன் திரைப்படத்தில் மூலம் மீண்டும் இணைந்திருக்கின்றார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவலை அண்மையில் வந்திருந்தது. தற்போது பிரபல ஒளிப்பதிவாளரான ஓம்பிரகாஷ் இப்படத்தில் இணைந்துள்ளார். மேலும் சண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் இப்படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இத்திரைப்படம் கூடிய விரைவில் ரிலீஸாகும் என ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |