Categories
சினிமா

தனுஷின் பெயரை நீக்கிய ஐஸ்வர்யா… “அவரின் குடும்பத்துடன் நெருக்கம்”… குழப்பத்தில் ரசிகர்கள்…!!!

ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பதிவானது தற்போது வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமா உலகில் பிரபல ஜோடிகளான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக ட்விட்டரில் ஐஸ்வர்யா தன் பெயர் பின்னால் இருந்து தனுஷின் பெயரை நீக்கிவிட்டு அப்பாவான ரஜினிகாந்தின் பெயரை இணைத்தார்.இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தனுஷின் பெயரை நீக்கினார்.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா தனுஷின் அண்ணாகிய செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி உடன் இருப்பதாக தனது இன்ஸ்ட பக்க ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கின்றார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்ற நிலையில் தனுஷின் பெயரை ஐஸ்வர்யா நீக்கி விட்ட நிலையில் அவரின் குடும்பத்தோடு நெருக்கமாக இருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Categories

Tech |