தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் மாறன் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் மாஸ்டர் பட பிரபலம் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாறன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகி ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.