Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷின் மாறன்… ஓடிடியில் ரிலீஸ்… இனி இப்படி நடக்காது… தனுஷ் நம்பிக்கை…!!!!

தனுஷின் மாறன் திரைப்படமானது மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்திருக்கின்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் திரைக்கு வந்த பொழுது பல விமர்சனங்களை சந்தித்தார். அத்தனை விமர்சனங்களையும் தாண்டி தற்போது உலகம் முழுவதும் அறிந்த நடிகராக இருக்கின்றார். தற்போது இவர் வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தற்போது கூடிய விரைவில் இவரின் மாறன் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியிருக்கிறார் மற்றும் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்திருக்கின்றார். தனுஷின் கடந்த இரண்டு படங்களும் ஓடிடியில் தான் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது மாறன் திரைப்படமும் ஓடிடியில்தான் ரிலீஸாக இருக்கின்றது. இதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரசிகர்கள் இவரின் படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இனி வரும் தனுஷின் படங்கள் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது மாறன் திரைப்படமானது மார்ச் மாதம் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான செய்தி கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |