Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் முதல் ஹாலிவுட் படம்…. ட்ரெய்லர் வெளியீடு…. கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்…!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் அசுர நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தனுஷ். பாலிவுட் சினிமாக்களிலும் தனக்கான இடத்தை பிடித்திருக்கின்ற நடிகர் தனுஷ் ஹாலிவுட்டிலும் தடம் பதித்திருக்கிறார். பிரபல ஹாலிவுட் இயக்குனர்களான ஆண்டனி ரூசோ,ஜோ ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகிவரும் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடித்து வந்தார் தனுஷ். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக  அமெரிக்கா சென்று தனுஷ் சுமார் மூன்று மாதங்கள் தங்கியிருந்து படப்பிடிப்பை நிறைவு செய்தார். இந்த நிலையில் இந்த படத்தில் ஹாலிவுட் நட்சத்திரங்களான ரயான் காஸ்லிங்க், கிறிஸ் இவான்ஸ்,அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்ரிக் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தி கிரே மேன் படம் 1500 கோடி ரூபாய் செலவில் தயாராகி இருக்கின்றது.

வருகின்ற ஜூலை 22ஆம் தேதி தி கிரே மேன் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதுவரை இந்த படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இருக்கின்றது. நேற்று இந்த படத்தின் ட்விட்டர் எமோஜ் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இன்று படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகர் தனுஷும் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள்.

நடிகர் தனுஷுக்கு கடைசியாக தமிழில் வெளியான சில படங்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை. அதற்கு மாறாக நெகட்டிவ் விமர்சனங்களை குவித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் தனுஷின் முதல் ஹாலிவுட் படமான விக்ரமின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ட்ரெய்லர் ரிலீஸ் அறிவிப்பை முன்னிட்டு ரசிகர்கள்# The Grey Man ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து கொண்டாடி வருகின்றார்கள்.

Categories

Tech |