Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம்…. ஒரு முடிவோடுதான் இருக்காரு போலயே…. இணையதளத்தில் வைரலாகும் போட்டோ….!!!

நடிகர் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்பொழுது வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடிக்க வருகிறார். நடிகர் தனுசுக்கு சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் தன் திரை வாழ்க்கையில் கவனம் செலுத்த தவறியதில்லை.

இதனை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவர இருக்கும் மாறன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தமிழில்  ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே ஆகிய படங்களை தொடர்ந்து தற்பொழுது மாறன் படமும் ஓடிடி வெளியாவதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்திருந்தார். இதனால் தனுஷ் ரசிகர்களை  கொண்டாட வைத்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் நானே வருவேன் படப்பிடிப்பிற்கு  பிறகு மீண்டும் வாத்தி படப்பிடிப்பில் நடித்து வருகிறார். தற்போது ஹைதராபாத்தில் வாத்தி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதற்காக ஐதராபாத்துக்கு சென்றிருக்கும் தனுஷ் அவரது மகன் யாத்ராவையும் அவருடன் அழைத்து சென்றிருக்கிறார். அங்கு தனுஷ் மகன் யாத்ராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் ஐதராபாத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலுக்கு சென்று உணவருந்திக் கொண்டிருக்கும் போது எடுக்கபட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி  பரவி வருகிறது.

Categories

Tech |