Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷின் வாழ்த்து… “பதில் அளித்த ஐஸ்வர்யா”… பாராட்டும் நெட்டிசன்ஸ்…!!!

பயணி பாடலுக்கு தனுஷ் கூறிய வாழ்த்துக்கு ஐஸ்வர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். பிரிவுக்குப் பின் இருவரும் அவர்களின் கெரியர்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யா 9 ஆண்டுகளுக்குப் பிறகு பயணி என்ற ஆர்வம் பாடலை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பாடலை தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருந்தார். ஐஸ்வர்யாவை தோழி என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனுஷின் பதிவுக்கு ஐஸ்வர்யா பதில் அளித்துள்ளார். அதில் “நன்றி தனுஷ்” என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த இணையதள வாசிகள் தனுசை போல் சர்ச்சையை ஏற்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தாமல் பெயரை சொல்லி அழைத்து உள்ளீர்கள் என்று பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |