தனுஷின் ‘D43’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? என இயக்குனர் கார்த்திக் நரேனிடம் நடிகர் மகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் 43-வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, மாஸ்டர் பட நடிகர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தற்போது நடிகர் தனுஷ் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில் நடிகர் மகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குனர் கார்த்திக் நரேனிடம் ‘D43 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது ?, உங்கள் அழைப்பிற்காக காத்திருக்கிறேன்’ என கேட்டுள்ளார். இதற்கு கார்த்திக் நரேன் ‘மிக விரைவில்’ என பதிலளித்துள்ளார். நடிகர் தனுஷ் தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்புகளை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பியவுடன் D43 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.