தனுசுக்கு இருக்கும் ஆசை ஐஸ்வர்யாவுக்கு இல்லாதது தெரிய வந்திருக்கின்றது.
ஐஸ்வர்யா “வை ராஜா வை” திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருந்த நிலையில் ஏழு வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் பணியில் களமிறங்கியுள்ளார். அண்மையில் இவர் இயக்கத்தில் ஆல்பம் பாடல் வெளியானது. இதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் துர்கா படத்தை இயக்க உள்ளார்.
மேலும் இரண்டு பாலிவுட் திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். ஐஸ்வர்யா அவரின் அப்பா ரஜினியின் தீவிர ரசிகை ஆவார். இந்நிலையில் அப்பாவை வைத்து படம் இயக்க ஆசை உள்ளதா என கேட்டபோது அவர் கூறியதாவது, அப்பாவை இயக்குவது பற்றி நினைத்துகூட பார்த்ததில்லை. அவரின் தீவிர ரசிகையாக இருப்பது சந்தோஷம். ஆனால் அப்பாவை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பயன்படுத்திக் கொள்வேன் என கூறியுள்ளார். ஆனால் ரஜினியின் தீவிர ரசிகரான தனுஷிற்கு ரஜினியை வைத்து இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது குறிப்பிடத்தக்கது.