Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

தனுஷுக்கு ஜோடியாக நடிக்க…. “எனக்கு சம்பளமே வேண்டாம்” என கூறிய பிரபல நடிகை…. யார் தெரியுமா…???

தனுஷுடன் இணைந்து நடிப்பதற்கு எனக்கு சம்பளமே வேண்டாம் என கூறிய பிரபல நடிகை கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பு, பாடல், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் தற்போது பல படங்களில் நடித்து தன்னை பிஸியாக வைத்துக் கொள்கிறார். தனுஷ் நடித்த “மாறன்” திரைப்படம் கூடிய விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கின்றது. அடுத்ததாக தனுஷ் செல்வராகவன் இயக்குகின்ற “நானே வருவேன்” திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இத்திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகாமல் இருந்த நிலையில் பிப்ரவரி 10-ல் ஐ திரைப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் மற்றும் கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடிக்க இருக்கிறார். இவர் இப்படத்தில் நடிப்பது குறித்து கூறியதாவது,”சினிமாவில் தனுஷ் மிகப்பெரிய முன்னணி நடிகராக உள்ளார். இவருடன் இணைந்து நடிப்பதற்காக பலர் காத்திருக்கின்றனர். அந்த வரிசையில் நானும் உள்ளேன். தனுசுக்கு ஜோடியாக சேர்ந்து நடிக்க எனக்கு சம்பளம் கூட தர வேண்டாம்” என கூறியுள்ளார். மேலும் “செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என இந்துஜா கூறியிருக்கிறார்.

Categories

Tech |