Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷுக்கு மீண்டும் தொடரும் சிக்கல்… கதிரேசன் தம்பதி சீராய்வு மனு தாக்கல்…!!!!!!

தமிழ் சினிமாக்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தங்களின் மகன் என்றும் கடந்த 2002ஆம் ஆண்டு அவர் தங்களைப் பிரிந்து சென்றதாகவும் வேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். தனுஷ் தங்களுக்கு மாதம் 65 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என அவர்கள் கேட்டிருந்தனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் இந்த வழக்கில் கதிரேசன் மீனாட்சி தம்பதி தற்போது சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி நடிகர் தனுஷ் எனது மகன் என கோரி தொடரப்பட்ட வழக்கில், நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், போலியான ஆவணங்கள் இருப்பதாகவும், நான் அளித்த புகாரின் அடிப்படையில் முறையாக விசாரித்து, இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் ஆவணங்களின் அடிப்படையில் மட்டும் இந்த வழக்கை முகாந்திரம் இல்லை என கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் நடிகர் தனுஷ் கஸ்தூரிராஜாவின் மகன் என முடிவுக்கு வரவில்லை. நடிகர் தனுஷ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழ் உண்மை தன்மை அறியும் விதமாக கீழமை நீதிமன்றம் மதுரை மாநகராட்சிக்கு அனுப்பியுள்ளது. இதனை அடுத்து அதன் முடிவுகள் இதுவரை வழங்கப்படாத நிலையில் அதனை கருத்தில் கொள்ளாமல் நடுவர் வழக்கை தள்ளுபடி செய்தது ஏற்றதக்கதல்ல.

மேலும் இது தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் போலியான ஆவணங்களை இருப்பதை சுட்டிக் காட்டியிருக்கிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கூறியிருப்பதை  ரத்து செய்து மீண்டும் வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

Categories

Tech |