Categories
சினிமா

“தனுஷுடன் இருக்கும் அந்த பொண்ணு யாருப்பா”….? இது அவங்களுக்கு தெரியுமா….? வெளியான தகவல்…!!!

சமூக வலைதளங்களில் நடிகர் தனுஷுடன் ஒரு இளம் பெண் அமர்ந்து சாப்பிடும் புகைப்படம் வெளியானதையடுத்து அந்தப் பெண் யார் என கூறப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்ததையடுத்து தற்பொழுது தனது கவனத்தை முழுவதும் திரைப்படத்தின் வசம் திருப்பி இருக்கின்றார். இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்திலும், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி கொண்டிருக்கும் வாத்தி திரைப்படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்பொழுது வாத்தி படப்பிடிப்புக்காக தனுஷ் ஹைதராபாத்தில் உள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியானது. அதில் தனுஷுடன் மூத்த மகன் யாத்ராவும் இருந்தார்.

மேலும் தனுஷ் ஒரு பெண்ணோட அமர்ந்து உணவருந்தும் புகைப்படம் வெளியானது. இதைப்பார்த்த ரசிகர்கள் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள பெண் யார் என்று கேட்டு வந்தநிலையில் தற்பொழுது அந்தப் பெண்ணைப் பற்றி தகவல் வெளிவந்துள்ளது. அவர் வேறு யாரும் இல்லை தனுஷின் ஆடை வடிவமைப்பாளர். ஆம், இவர் தனுஷின் பல படங்களுக்கு ஆடை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |