Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷும் ஐஸ்வர்யாவும் போட்ட டீல்”… டீலை நிறைவேற்றும் தனுஷ்…!!!

தனுஷும் ஐஸ்வர்யாவும் டீல் ஒன்றை போட்டுள்ளனர்.

ஐஸ்வர்யாவும் தனுஷும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் திருமண பந்தத்தில் சந்தோஷமாக வாழ்ந்து கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பெறுவதாக இணையத்தில் அறிவித்திருந்தனர். இவர்களை சேர்த்து வைக்க பலரும் முயற்சிகளில் ஈடுபட்டு தோல்வியடைந்த நிலையில் பிள்ளைகள் இருவரும் அம்மா அப்பாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என கூறினர். அது நடக்காது என்பதால் தனுஷும் ஐஸ்வர்யாவும் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்கள்.

அது என்னவென்றால், “நான் வேலையில் பிசியாக இருக்கும்போது பிள்ளைகளே நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிசியாக இருக்கும் பொழுது பிள்ளைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்” என ஐஸ்வர்யா கூறினாராம். இதற்கு தனுஷ் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தபோது மூத்தமகன் யாத்ராவை அழைத்துச் சென்றார். மேலும் அண்மையில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் தனது இரண்டு மகன்களுடன் பங்கேற்றுள்ளார் தனுஷ். தனுஷ் தற்போது ஓய்வாக இருப்பதால் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |