நேற்று முன்தினம் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் நேற்று ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சென்ற 2021 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வெளியான கர்ணன் திரைப்படமானது ரசிகர்களிடையே கொண்டாடப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படம் ரிலீஸாகி 1 வருட காலம் முடிவடைந்ததால் தனுஷ், ‘மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு, சந்தோஷ் நாராயணன் மற்றும் பட குழுவினருக்கு நன்றி கூறி ட்விட்டர் பதிவு செய்திருந்தார்.
நேற்று முன்தினம் கர்ணன் திரைப்படத்தை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில் நேற்று ரஜினி ரசிகர்கள் கொண்டாடினார்கள். காரணம் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 1997ம் வருடம் ஏப்ரல் 10-ஆம் தேதி அருணாச்சலம் திரைப்படம் ரிலீஸ் ஆகியது. இத்திரைப்படம் ரிலீஸ் ஆகி நேற்றுடன் 25 வருடங்கள் ஆகிறது. ரஜினி நிஜவாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்களோ அதை படத்தில் செய்திருப்பார். அந்த அளவிற்கு படம் இருந்தது. இந்நிலையில் மீண்டும் இதுபோன்ற படம் அமையுமா என்கிறார்கள் ரசிகர்கள். இதனால் #25yearsofarunachalam என்ற ஹேஷ்டேக் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.