பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா ஹைதராபாத் சென்று தனுசை நேரில் சந்தித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுசுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிலிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷ் D43, நானே வருவேன், அத்ரங்கி ரே, தி கிரே மேன், ஆயிரத்தில் ஒருவன்-2 என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் மூலம் தனுஷ் தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்க இருக்கிறது .
#Production4 gearing up with a meeting of #NarayanDasNarang ,#PuskurRamMohanRao @AsianSuniel &
Ilaya Superstar @dhanushkraja 🔥 along with Director @sekharkammula in Hyderabad 🤩@SVCLLP ‘s Magnum Opus rolling 🔜 pic.twitter.com/Oano1JNWJx— Sree Venkateswara Cinemas LLP (@SVCLLP) July 3, 2021
அமெரிக்காவில் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் D43 படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளார். இந்நிலையில் இயக்குனர் சேகர் கம்முலா மற்றும் தயாரிப்பாளர்கள் நாராயண்தாஸ் நரங், பி.ராம் மோகன் ஆகியோர் தனுசை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் தனுஷுடன் இயக்குனர் சேகர் கம்முலா மற்றும் படக்குழுவினர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.