தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே வயது வித்தியாசம் இருந்தாலும் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் தற்போது 2 ஆண் பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் சினிமா நடிகைகள் பலருடன் தனுஷுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை வர ஆரம்பித்துள்ளது. இதனை அறிந்த குடும்பத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தி பார்த்துள்ளனர். இருப்பினும் இருவருக்குமிடையே உச்சகட்டத்தை தொட்ட சண்டை பிரிந்து வாழும் முடிவை எடுக்க வைத்துள்ளது.
அதன்படி இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிய போவதாக அறிவித்தனர். இதையடுத்து ஐஸ்வர்யா ஆல்பம் இயக்கும் பணியில் பிஸியானார். யாருடைய தயவும் தேவையில்லை என்று வெளியில் காட்டிக் கொண்டாலும் தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் கணவர், மறுபக்கம் அப்பாவை நினைத்து ஐஸ்வர்யா வருத்தத்தில் உள்ளாராம். மனதளவில் பலவீனம் அடைந்துள்ள ஐஸ்வர்யா உடலாலும் பலவீனமடைந்துள்ளாராம். இதனால் தான் ஐஸ்வர்யாவுக்கு அடிக்கடி உடலுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.