ராமேஸ்வரம் அருகே அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டிருப்பதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக தனுஷ்கோடி விளங்குகிறது. இந்த சூழலில் இன்று தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகின்றது.
இதனால் பல அடி தூரத்திற்கு கடல் அலை எழும்பி வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அரிச்சல் முனை பகுதிக்கு செல்ல பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வார இறுதி மற்றும் விஜயதசமி, சரஸ்வதி பூஜை விடுமுறை, காலாண்டு தேர்வு விடுமுறை முன்னிட்டு ராமேஸ்வரம் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.