Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனுஷ்கோடி செல்ல தடை…. ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலாவினர்…. வியாபாரிகள் வேதனை….!!

தனுஷ்கோடி செல்வதற்கு காவல்துறையினர் திடீரென தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

தமிழகம் முழுவதிலும் கொரோனா 3-வது அலையை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு  கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிகளுக்கு சுற்றுலா வாகனங்கள் வழக்கம்போல நேற்று காலை 8 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் திடீரென அரிச்சல்முனை செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் அனைவரும் மிகுந்த குழப்பத்துடனும், ஏமாற்றத்துடனும் திரும்பி சென்றுள்ளனர்.

மேலும் சுற்றுலா இடங்களுக்கு செல்வதற்கு அரசு இதுவரையிலும் தடை விதிக்காத நிலையில் காவல்துறையினரே தனுஷ்கோடி செல்வதற்கு திடீரென தடை விதித்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் சுற்றுலாப்பயணிகளை நம்பி அரிச்சல்முனை பகுதிகளில் சங்கு, சிற்பி கடை, மீன் கடை, பழக்கடை போன்ற 200க்கும் மேற்பட்ட கடை வைத்திருப்பவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர். இதற்கிடையே பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் அரசு அதிகாரிகளின் குடும்பங்களுக்கு மட்டும் தனுஷ்கோடிக்கு சென்று வர அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |