நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவனின் பிறந்த நாளான நேற்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் சமீபத்தில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யப்போவதாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள். இதனை கண்ட அவர்களது குடும்பத்தாரும், நண்பர்களும் இருவரையும் சேர்த்து வைக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு விட்டு தங்களது கேரியரில் பிசியாகி விட்டார்கள். இவ்வாறு இருக்க நேற்று நடிகர் தனுஷின் அண்ணனான செல்வராகவனின் பிறந்தநாளை அவர் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செல்வராகவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்குரு, நண்பர், தந்தை போல் இருப்பவர்” என பதிவிட்டுள்ளார்.