Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷ் இப்ப யாருடன் இருக்கிறாரு தெரியுமா?”…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!

நடிகர் தனுஷ் அவரது மகன் யாத்திரா உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணைய தளத்தில்  வெளியாகி செம வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்தி  அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் பிரிவிற்கு என்ன காரணம் என்று தெரியாததால் பல பேர் பலவிதமாக கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவர்களை சேர்த்து வைக்கும் பணிகளை இவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்தின் கோபத்தை குறைக்க ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் வாழ விருப்பம் தெரிவித்ததாக சில நாட்களுக்கு முன் தகவல்கள் வந்தன. இதனால் கஸ்தூரிராஜா, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுடன் திருப்பதி சென்று வருமாறு கேட்டுள்ளார். இதற்கு நடிகர் தனுஷ் செவிசாய்க்கவில்லை.

மேலும் இயக்கத்தில் உருவான ஆல்பம்  பாடலின் புரோமோ வெளியானது. மேலும் அனிருத் இசையமைத்துள்ள இந்த ப்ரோமோ பாடலில் ஐஸ்வர்யா தனது பெயரை மாற்றிய விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் அவர் ஐஸ்வர்யா தனுஷ் என்று வைத்திருந்த பெயரை தற்போது நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் இவரின் பெயர் ஐஸ்வர்யா தனுஷ் என்றே இருக்கிறது. இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் இணைந்து வாழ இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா தனது பெயரை மாற்றியது இவர்கள் இனி சேர வாய்ப்பில்லை என்பதை குறிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

தற்போது நடிகர் தனுஷ் வாத்தி படப்பிடிப்பை முடித்துவிட்டு நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ள்ளார். இந்நிலையில் இவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும் நெருங்கிய நண்பர்களும் சமாதானம் பேசி சேர்த்து வைக்கும் முயற்சியை தொடர்ந்து செய்து வருகின்றனர். தற்போது தனுஷ் அவரது மகன் யாத்திரா உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி செம வைரலாகி வருகிறது. இவர் நானே ஒருவன் படப்பிடிப்பில் இருக்கும் போது தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் மற்றும் அவரின் மகன் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |