மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் கதிரேசன் மற்றும் மீனாட்சி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர் . இவருக்கு கலையரசன்மகன் இருந்தனர். இவர் 11 ஆம் வகுப்பு படிக்கும்போது காணாமல் போய்விட்டார். இந்நிலையில் சினிமாவில் தனுஷ் நடித்த படத்தை பார்த்துவிட்டு தனது மகன் தான் தனுஷ் என்றும் அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அப்போது மதுரை தம்பதியர் தங்களை கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சி செய்ததாகவும் நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்று விட்டதாகவும் என குற்றச்சாட்டுகளை கூறி நடிகர் தனுசுக்கும் கஸ்தூரி ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அதனை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தவறினால் ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என்று நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கஸ்தூரிராஜா சார்பில் வழக்கறிஞர் காஜா மொய்தீன் கிஸ்தி நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் ரூ.10 கோடி கேட்டு தங்களுக்கு அனுப்பிய நோட்டீஸை நடிகர் தனுஷ் திரும்ப பெற வேண்டும் என்றும் தனுஷ் எங்கள் மகள் தான் என்பதில் நாங்கள் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை. மேலும் சட்டப்படி சந்திக்க தயார் என மேலூர் தம்பதியினரின் வழக்கறிஞர் நடிகர் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.