Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு நண்பர்கள் ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சி… என்ன நடந்தது தெரியுமா…???

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சேர்த்து வைப்பதற்காக அவர்களின் நண்பர்கள் விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இதை அறிந்த ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக நண்பர்கள், உறவினர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் இருவரும் அவரவர் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுடைய நெருங்கிய நண்பர்கள் விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இதில் தனுஷ்-ஐஸ்வர்யா இருவருமே கலந்து கொண்டனர். ஆனால் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேசிக் கொள்ளவில்லை. நிகழ்ச்சி முடிந்த உடனே இருவரும் கிளம்பி சென்றுவிட்டனர். இவர்கள் இருவரும் பேசிக் கொள்வார்கள். ஏதாவது உடன்பாடு ஏற்படும் என நண்பர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

Categories

Tech |