Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷ்-ஐஸ்வர்யா இணைந்தாலும்… அதுக்கு மட்டும் வாய்ப்பில்ல போல…!!!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைந்தாலும் தனுஷின் அந்த ஒரு ஆசை மட்டும் நிறைவேறாது போல் உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அறிந்த ரசிகர்கள், உறவினர்கள், சினிமா வட்டாரங்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக பலரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் சேர்ந்து வாழ்வதாக முடிவெடுத்துள்ளாரார்களாம். இதற்கு காரணம், ரஜினி மகன்களுடன் சேர்ந்து வாழவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார்களாம்.

ரஜினியை வைத்து தனுஷ் ஒரு படத்தையாவது இயக்கிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் ரஜினி தலைவர் 170 திரைப்படத்திற்குப் பிறகு சினிமா வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்கப் போகிறாராம். தலைவர் 170 திரைப்படத்தில் தனுஷ் இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு இப்போது வாய்ப்பில்லை என்கிறார்கள். தனுஷ் இயக்குனர் ஆனதிலிருந்து தன் தலைவர் ரஜினியை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் மற்றும் ஒரு காட்சியிலாவது அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் இதுவரை நடக்கவில்லை.

Categories

Tech |