தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைந்தால் என்ன நடக்கும் என்று அவர்களின் நட்பு வட்டாரங்கள் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இவர்கள் பிரிவதாக அறிவித்தனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் பிரிவதாக அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இதனைத்தொடர்ந்து குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழலாம் என முடிவெடுத்துள்ளார்களாம்.
ஆனால் இவர்களின் நண்பர்கள், இவர்கள் பிரிவார்கள் என நாங்கள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்றே. இவர்கள் தற்போது இணைந்தாலும் கணவன்-மனைவியாக இல்லாமல் ஒரே வீட்டில் மட்டும் குழந்தைகளுக்காக இருப்பார்கள் என கூறுகின்றனர் இவர்களின் நண்பர்கள். அண்மையில் சென்னையில் நடந்த நைட் பார்ட்டி ஒன்றில் இருவரும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக் கொள்ளவில்லை. நண்பர்களிடம் மட்டும் பேசிக் கொண்டு சென்று விட்டனர். இதனால் ரசிகர்களுக்கு இவர்கள் இருவரும் இணைவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.