உயிரிழந்த மாணவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தனுஷ்(19) என்ற மாணவன் நேற்று இரவு நீட் தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தான்.. மகன் படிப்பதை கண்ட பெற்றோர் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை எழுந்து தனது மகனை பார்க்க சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தனுஷ் வீட்டில் உள்ள முற்றத்தில் நீட் தேர்வின் அச்சம் காரணமாக தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் நிலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவன் உடல் இறுதிச்சடங்கிற்காக வீட்டின் முன்பு வைக்கப்பட்டுள்ளது.. மாணவனின் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திமுகவின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மாணவர் தனுஷ் உடலுக்கு நேரில் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.. பின்னர் அந்த மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்..
முன்னதாக முதல்வர் முக ஸ்டாலின் நீட்தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம். நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது. நாளை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு முழுமையாக விலக்கு பெற தீர்மானம் நிறைவேற்றபடும்.
மாணவர்களுக்கு நீட் தேர்வு ஏற்படுத்தும் சிரமங்களை புரிந்துகொள்ளாத ஒன்றிய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வர வேண்டிய மாணவ- மாணவிகளின் தற்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள், ஆள்மாறாட்டம் மற்றும் மாணவர்களின் தற்கொலைகள் கூட ஒன்றிய அரசின் மனதை மாற்றவில்லை என்று அறிக்கை வாயிலாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.