நானே வருவேன் திரைப்படத்தின் ஹீரோயின் தனுஷ் மற்றும் செல்வராகவன் பற்றி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடிக்கிறார். இந்நிலையில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எல்லி அவ்ரம் தனுஷ் பற்றி கூறியுள்ளதாவது, தனுஷுடன் இணைந்து நடித்தது ஒரு கனவு போல இருக்கின்றது. சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்தாலும் பந்தாவே இல்லாமல் இருக்கிறார் தனுஷ். படத்தில் சக நடிகரின் ஆதரவு இல்லாமல் நம்மால் நடிக்க முடியாது. தனுஷ் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். மேலும் அன்பானவரும் கூட என கூறியுள்ளார்.
செல்வராகவன் அவர்களின் திரைப்படங்களை இதுவரை நான் பார்த்தது இல்லை. ஆனால் அவருடன் படப்பிடிப்பில் ஈடுபட்டதில் அவரின் ரசிகையாகி விட்டேன். இந்த படத்தின் கதையை சொல்ல அவர் அழைத்தார். அவருக்கு இருக்கும் தெளிவை பார்த்து நான் வியந்து போனேன். அவரிடமிருந்து இயக்குவது பற்றி பலவற்றை கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார். நானே வருவேன் திரைப்படத்தின் என்னுடைய வேடம் பற்றி கூற கூடாது. ஆனால் என்னுடைய நிஜ வாழ்க்கையின் கேரக்டர் போல தான் இந்த படத்தில் இருக்கும் என கூறியுள்ளார். மேலும் நான் ஸ்வீடனை சேர்ந்தவள் என்றாலும் நானும் இந்திய பெண் தான் என கூறியுள்ளார்.