இயக்குனர் செல்வ ராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் “நானே வருவேன்”. இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டைவேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச் சந்திரன் நடிக்கிறார். அத்துடன் யோகிபாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வி கிரியேசன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். ஓம்பிரகாஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
புவன் ஸ்ரீனிவாசன் படத் தொகுப்பு செய்கிறார். இந்த படம் செப்டம்பர் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதன்பின் இந்த படத்தின் 2வது பாடல் “ரெண்டு ராஜா” இன்று காலை 10:50 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில் இந்த படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா மற்றும் தனுஷ் இணைந்து பாடியுள்ள இப்பாடலை ரசிகர்கள் சமூகவலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.