தனுஷ் நடிக்கும் வாத்தி திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பின் நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியானது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி பிரபல பைனான்சியரான அன்புச்செழியன்தான் வாத்தி திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுகின்றாராம். இப்படம் டிசம்பர் மாதம் 9-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கின்றார்கள் குறிப்பிடத்தக்கது.