Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிப்பில் ” மாறன்” படத்தின் ‘பர்ஸ்ட் சிங்கிள்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

படத்தின் ‘பர்ஸ்ட் சிங்கிள்’ நாளை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

தனுஷ் தற்போது மாறன் படத்தில் நடித்துள்ளார். தனுசுக்கு இது 43ஆவது படம்.. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி, கிருஷ்ணகுமார் மற்றும் மகேந்திரன் ஆகிய நான்கு பேரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைபடத்தை விவேகானந்த சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனுஷ் நடிக்கும் மாறன் படம் படப்பிடிப்பு முடிந்த பின் பின்னணி பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்தபடத்தின் ‘பர்ஸ்ட் சிங்கிள்’ நாளை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. முதல் பாடலாக பொல்லாத உலகம் என்ற பாடல் வெளியாக இருக்கின்றது. இப்பாடலை நடிகர் தனுஷ் மற்றும் தெருக்குரல் அறிவு இருவரும் இணைந்து பாடியிருக்கின்றனர். பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார். இந்த அறிவிப்பை  அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |