ராக்கி, சாணிக் காயிதம் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். “கேப்டன் மில்லர்” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது. வரலாற்று பாணியில் உருவாக உள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இவற்றில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் இணைந்துள்ளார்.
அத்துடன் இந்த படத்தில் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இதை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தன் சமூகவலைதளப்பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். தனுஷ் நடிப்பில் “நானே வருவேன்” படம் செப்டம்பர் 29ம் தேதியும், “வாத்தி” திரைப்படம் டிசம்பர் 2ம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.