செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் என்ற படத்தின் பெயரை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மாற்றும்படி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து அவரின் வேண்டுகோளை ஏற்று படத்தின் பெயர் மாற்றப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. காதல் கொண்டேன், புதுப்பேட்டை, துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன போன்ற படங்களை தொடர்ந்து செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி சென்னையில் துவங்க உள்ளது. இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதை அடுத்து, இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
Categories