Categories
சினிமா செய்திகள் டிரெய்லர் தமிழ் சினிமா

தனுஷ் பட ட்ரெய்லரை சிம்பு வெளியிடுகிறாரா…? என்னப்பா சொல்றீங்க…!!!

நடிகர் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிம்பு வெளியிட உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ், சிம்பு ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி நடித்து வருகின்றார்கள். ரஜினி-கமல், விஜய்-அஜித் இந்த வரிசையில் தனுஷ்-சிம்பு இருக்கின்றார்கள். இவர்களுக்கிடையே சினிமாவை தவிர்த்து
நிஜ வாழ்விலும் வேலை நிமித்தமாக போட்டிருந்தது. தனுஷின் “காதல் கொண்டேன்” திரைப்படத்தை பார்த்து போட்டியாக சிம்பு “மன்மதன்” திரைப்படத்தில் நடித்தார். மேலும் வெற்றியும் கண்டார். சிம்புவின் “குத்து, தம்” உள்ளிட்ட படங்களை பார்த்து தனுஷ் “திருடா திருடி” திரைப்படத்தில் நடித்தார். இருவருக்குள் ஆரம்ப காலத்திலிருந்தே பணி நிமிர்த்தமாக போட்டிகளில் இருந்து வருகின்றது. சிம்பு சில பல காரணங்களால் இடையில் பல சறுக்கல்களால்  பின் தங்கினார். ஆனால் தனுஷ் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வெற்றிப்படங்களாக்கி டக்குனு வளர்ந்து விட்டார்.

தற்போது சிம்பு மீண்டும் மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமல் விலகிய நிலையில் தற்போது சிம்பு தொகுத்து வழங்கயிருக்கின்றார். இதனைஅடுத்து தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் மாறன் திரைப்படத்தின்  ட்ரெய்லரை சிம்பு வெளியிட போவதாக தகவல் கிடைத்திருக்கின்றது. இப்படத்தை தயாரிக்கும் ஹாட்ஸ்டார் நிறுவனமானது சிம்புவை மாறன் படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்யுமாறு கூறி உள்ளது. ஏனென்றால் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். இதனால் ஹாட் ஸ்டார் நிறுவனம் தாங்கள் வாங்கியுள்ள படத்தின் டிரைலரை சிம்பு வெளியிட்டால் நன்றாக இருக்கும் என எண்ணினார்களாம். இதற்கு சிம்புவும் சம்மதித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் கூடிய விரைவில் வெளியாகும்.

Categories

Tech |