சினிமா உலகை பொறுத்தவரை ஒருவர் நடிக்கத் தொடங்கிய பின் அவருக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து சம்பளத்தில் ஏற்றம் இறக்கம் இருக்கும். ஒரு படம் வெளியாகி அது அதிகளவு மக்களால் பேசப்பட்டால் அதில் நடித்த நடிகர் நடிகைகள் தங்கள் சம்பளத்தை அதிகமாக கேட்டு தயாரிப்பாளர்களை திணற செய்வார்கள். அவ்வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டாக்டர் திரைப்படத்தில் டிரைலர் வெளியானது. இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால் டாக்டர் படத்திற்கு 25 கோடி சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயன் தான் தற்போது நடித்துவரும் டான் படத்திற்கு 35 கோடி சம்பளம் கொடுக்க வேண்டும் என்று லைக்கா நிறுவனத்திடம் கூறியுள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனிடம் கேட்டபோது அவர் மக்கள் மத்தியில் டாக்டர் படத்திற்கு இருந்த வரவேற்பை காரணமாக கூறியுள்ளார். இதனால் வேறு வழியின்றி சிவகார்த்திகேயன் கேட்ட சம்பளத்தை கொடுப்பதாக தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டுள்ளார். பிரபல நடிகரான தனுஷும் ஒரு படம் வெற்றி பெற்றால் அடுத்த படத்தின் சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.