Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷ் – ரஜினி பட நாயகிக்கு விவாகரத்தா”….? என்னப்பா இது லிஸ்ட் போய்கிட்டே இருக்கு….!!!

பிரபல நடிகை எமி ஜாக்சன் தனது கணவரை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த மாடல் மற்றும் திரைப்பட நடிகை எமி ஜாக்சன்.  இவர் தமிழ் திரையுலகில்  மதராசபட்டணம் படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன் பிறகு ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் எமி ஜாக்சன் ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் எமிஜாக்சன் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்நிலையில்  பிரபல தொழில் அதிபர் ஜார்ஜ் என்பவரை எமி ஜாக்சன் காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதனை தொடர்ந்து எமி ஜாக்சன்,  ஜார்ஜ் இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சினைகள் இருந்து வந்ததால் இவர்கள் பிரிந்து வாழ்த்துவருவதாகவும் விரைவில் விவாகாரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது பிரிட்டன் நடிகர் எட் வெஸ்டவிக் என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எமி ஜாக்சன் விரைவில் பிரிட்டன் நடிகர் எட் வெஸ்டன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக வதந்திகள் கிளம்பி வருகிறது. இதனை பற்றி சம்மந்த பட்டவர்கள் அறிவித்தால் தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |