தனுஷ் தனது மனைவியுடன் ஒரு போதும் சேர்ந்து வாழ முடியாது என்று கூறிய நிலையில் தனது அப்பாவிற்காக இறங்கி வந்த ஐஸ்வர்யா இனி என்வழி தனி வழி என்று முடிவெடுத்துள்ளார்.
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா கடந்த 18 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி தாங்கள் பிரிய போவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்கள். இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் தனுஷ், ஐஸ்வர்யா குடும்பத்தார்களும், நண்பர்களும் இறங்கியுள்ளார்கள்.
இதனையடுத்து ஹைதராபாத்திலிருக்கும் ஐஸ்வர்யா தனது அப்பாவிடம் போன் போட்டு நலம் விசாரிக்கும் போது அவர் விவகாரம் தொடர்பாக மிகக்கடுமையாக பேசியுள்ளார். இதனால் மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வாழலாம் என முடிவெடுத்து தனுஷின் அப்பாவான கஸ்தூரி ராஜாவிடம் தொடர்பு கொண்ட ஐஸ்வர்யா அவரிடம் இது தொடர்பாக பேசியுள்ளார். ஆனால் தனுஷ் இனி ஐஸ்வர்யா உடன் கண்டிப்பாக சேர்ந்து வாழ முடியாது என்று கூறியுள்ளார் இவருடைய இந்த அதிரடியான முடிவைக் கேட்டு ஷாக்கான ஐஸ்வர்யா இனி என் வழி தனி வழி என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.